’லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் தற்கொலை! - கோலிவுட்டில் பரபரப்பு

லஷ்மன் ஸ்ருதி என்ற பெயர் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் பிரபலமான பெயராகும். கார்ணம், இந்த பெயர் கொண்ட இசைக்குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் மூலம் பாராட்டு பெற்றிருக்கிறது.
இசைக் குழு மட்டும் இன்றி சென்னையில் இசைக் கருவிகள் விற்பனை மையம் ஒன்றையும் லஷ்மன் ஸ்ருதி நிர்வாகம் நடத்தி வருகிறது. மேலும், ‘சென்னையில் திருவையாறு’ என்ற மார்கழி மாத இசை பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வருகின்றது.
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர்களான இரட்டையர் சகோதரர்கள் ராமன் - லஷ்மன் இசைத்துறையில் எப்படி பிரபலமோ அதுபோல், சினிமா துறையிலும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன், நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது இந்த திடீர் மரணம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ராமன் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.