Jul 08, 2019 05:44 AM

'பிகில்’ படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்! - குஷியில் ரசிகர்கள்

'பிகில்’ படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்! - குஷியில் ரசிகர்கள்

இயக்குநர் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான ‘பிகில்’ விஜயின் 63 வது படமாகும். இதில் மூன்று கெட்டப்புகளில் விஜய் இருப்பது போன்ற பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

 

மேலும், ரசிகர்கள் உருவாக்கும் போஸ்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டி ஒன்றையும் பிகில் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த ரசிகர்களின் போஸ்டர்களை படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டராக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால் விஜய் ரசிகரகள் உற்சாகமடைந்திருக்கும் நிலையில், அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றொரு அப்டேட்டை வெளியிட தயாராகி விட்டார்.

 

இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தி பதிவிட்டிருக்கும் அர்ச்சனா கல்பாத்தி, இன்று மாலை 6 மணிக்கு பிகில் படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாகவும், ஆனால் அது படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பற்றியது அல்ல, வேறு ஒன்றை பற்றியும், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

அர்ச்சனா கல்பாத்தியின் இந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, அவர்களை குஷியாக்கியும் இருக்கிறது.