சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் லேட்டஸ் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கிடையே இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படமே டிராப் ஆகும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை மறுத்த சுரேஷ் காமாட்சி, தனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும், என்று கூறினார்.
மேலும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருந்த நிலையில், திடீரென்று ஜூன் மாதத்திற்கு தள்ளி போனதோடு, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் சிம்பு நடிக்க சென்றுவிட்டார். தற்போது அவர் மஹா படப்பிடிப்பில் தான் இருக்கிறார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படப்பிடிப்பு இம்மாதம் நிச்சயம் தொடங்கும் என்றும், முதலில் சிம்பு, கல்யாணி இடம்பெறும் காதல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, அக்காட்சியில் மலேசியாவில் படமாக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
இன்னும் சில நாட்களில் ‘மஹா’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, ’மாநாடு’ படக்குழுவினரோடு சிம்பு மலேசியா பறக்க உள்ளாராம்.