Mar 01, 2019 05:24 AM

யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி வேடங்களில் நடிப்பதை தொடர்ந்து கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் பிரபல திரைப்பட நிறுவனம் யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது.

 

ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தான் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. ‘பன்னிக்குட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கருணாகரன், சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லக்‌ஷ்மி ப்ரியா, ராமர், பழைய ஜோக் தங்கதுரை என பல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

 

Pannikutty

 

அனுசரண் முருகையா இயக்கும் இப்படத்திற்கு கே என்கிற கிருஷ்ணகுமார் இசையமைக்கிறார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.சுகுமாரன் கலையை நிர்மாணிக்கிறார். எம்.அனுசரண் படத்தொகுப்பை கவனிக்கிறார்.