Jul 24, 2018 12:36 PM

ஸ்ரீ ரெட்டி வலையில் தானாக சிக்கிய பிரபல ஹீரோயின்!

ஸ்ரீ ரெட்டி வலையில் தானாக சிக்கிய பிரபல ஹீரோயின்!

தெலுங்கு சினிமா பிரபலங்கள் குறித்து செக்ஸ் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறி வருகிறார். துவரை ஸ்ரீ ரெட்டியின் பட்டியலில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிக்கியிருகிறார்கள்.

 

மேலும், இன்னும் ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் பெயர்களை வெளியிட தயாராக இருக்கும் ஸ்ரீ ரெட்டி, அதற்காக விரைவில் ஒட்டு மொத்த தமிழ் ஊடகங்களையும் சந்தித்து பேசப் போகிறாராம்.

 

இதற்கிடையே, எனக்கு மட்டும் அல்ல, திரிஷா, காஜல் அகர்வால், நயந்தாரா போன்ற ஹீரோயின்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கும், அவர்கள் பேசினால் அனைவரும் சிக்குவார்கள், என்று ஸ்ரீ ரெட்டி கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டியின் நகைகள் பற்றிய இந்த கருத்து குறித்து நடிகை திரிஷாவிடம் கேட்டதற்கு, ஸ்ரீ ரெட்டியை தனக்கு யாரென்றே தெரியாது, என்று முதலில் பதில் அளித்தவர், இவர்களைப் போன்றவர்களை வளர்த்துவிடாதீர்கள், என்றும் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

 

Trisha

 

சர்வதாசாரணமாக கடந்து போக வேண்டிய கேள்வியை திரிஷாவே, பெரிய கேள்வியை எதிர்கொள்வது போல எதிர்கொண்டு ஸ்ரீ ரெட்டி சொல்வது உண்மை என்பது போல பேசிவிட்டார், என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.