Jun 08, 2020 09:28 AM

பிக் பாஸ் லொஸ்லியா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜாம்பவான்!

பிக் பாஸ் லொஸ்லியா படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜாம்பவான்!

பிக் பாஸ் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான லொஸ்லியா, விரைவில் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படமான ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர்களான ஜான் பவுல் ராஜ், ஷாம் சூர்யா அகியோர் இணைந்து இயக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாக, இதனை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார்.

 

இந்த நிலையில், ‘பிரண்ட்ஷிப்’ படத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்ததோடு, படத்தை பார்க்க விரும்புகிறேன், என்றும் பதிவிட்டுள்ளார்.