May 05, 2019 09:38 AM

திருமணத்திற்கு பிறகு மாறிய வாழ்க்கை முறை! - வருத்தத்தில் விஜே மணிமேகலை

திருமணத்திற்கு பிறகு மாறிய வாழ்க்கை முறை! - வருத்தத்தில் விஜே மணிமேகலை

சினிமா நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பிரபல விஜே மணிமேகலை, திருமணத்திற்கு பிறகு மாறிய தனது வாழ்க்கை முறையை வருத்தத்துடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சினிமா பாடல் ஒன்றில் நடனம் ஆடிய நடனக் கலைஞர் ஹுஷைனைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொண்ட விஜே மணிமேகலை, தனது பெற்றோரை எதிர்த்து அவரை பதிவு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு விஜே பணியை விட்டுவிட்டு, வேறு சில டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வரும் மணிமேகலை சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு பிறகு தனது வீட்டில் பேச எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும், நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பாக தனது வீட்டில் பேசிய முயற்சி செய்வோம், என்று கூறியவர், முன்பெல்லாம் என் அறையில் ஏசி ஆப் செய்யாமலேயே கிளம்பி விடுவேன். ஆனால், இப்போது ஒரு மணி நேரம் ஏசி ஓடியதும் ஆப் செய்துவிடுகிறேன். முன்னாடி சாப்பாட்டை வீண் செய்வேன், இப்போது கொஞ்சம் கூட அப்படி செய்வதில்லை. அப்படியே மீந்துபோனால், இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுகிறேன், என்று தெரிவித்திருக்கிறார்.

 

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்காக, தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டிருக்கும் மணிமேகலை அதை கவலையுடன் தெரிவித்தாலும், அவரது இந்த மாற்றத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.