Jun 25, 2019 12:41 PM

வருடம் முழுவதும் இலவசம்! - மக்களுக்காக விஜயின் அதிரடி திட்டம்

வருடம் முழுவதும் இலவசம்! - மக்களுக்காக விஜயின் அதிரடி திட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு தனது படங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜயின் பிறந்தநாளன்று மட்டும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

 

இதற்கிடையே, சமீபத்தில் விஜயின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்க பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

 

இந்த நிலையில், கடலூர் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற நலத்திட்ட உதவியை தொடங்கியுள்ளார்கள்.

 

இந்த திட்டத்தின் மூலம், வருடம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவளிக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.

 

மேலும், இந்த இலவச உணவு வழங்கும் திட்டம் நடிகர் விஜயின் நேரடி பார்வையில் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.