Nov 04, 2019 06:36 AM

பிக் பாஸ் பாஸ் பிரபலத்தின் காதல் முறிந்தது! - காதலி வெளியிட்ட வருத்தமான பதிவு

பிக் பாஸ் பாஸ் பிரபலத்தின் காதல் முறிந்தது! - காதலி வெளியிட்ட வருத்தமான பதிவு

பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர்களில் தர்ஷன், சாண்டி, கவின், முகேன், அபிராமி, லொஸ்லியா, ஷெரீன் ஆகியோர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்கள். இதற்கு காரணம் இவர்களது காதல் என்றும் சொல்லலாம்.

 

கவினும், லொஸ்லியாவும் பிக் பாஸ் வீட்டில் அறிமுகமாகி பிறகு காதலர்களான நிலையில், பிக் பாஸ் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரான, குறிப்பாக பெண்களின் பேவரைட்டா தர்ஷன், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாகவே நடிகை ஷனம் ஷெட்டியுடன் காதலில் இருந்திருக்கிறார். இதனை நடிகை ஷனம் ஷெட்டி கூறினார். அதற்கு தர்ஷனும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

 

இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் தர்ஷனும், நடிகை ஷெரினூம் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கியதால், அவர்களுக்கு இடையே காதல் என்று கூறப்பட்டது. ஆனால், அது வெறும் நட்பு தான் என்று அவர்கள் பல முறை சொன்னாலும், அவர்களுக்கிடையில் இருப்பது காதல் என்பதை ஷனம் ஷெட்டியே நிரூபித்தார். ”இனி உன் வாழ்வில் நான் இல்லை” என்று கூறி ஷனம் ஷெட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். தர்ஷன் - ஷனம் ஷெட்டி காதல் பிரிவுக்கு ஷெரீன் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால், பிக் பாஸ் வீட்டில் ஷெரீனுக்கும், வனிதாவுக்கும் இடையில் மிகப்பெரிய சண்டை நடந்தது.

 

Darshan and Sherin

 

பிக் பாஸ் போட்டி முடிந்த பிறகு தர்ஷனும், ஷனம் ஷெட்டியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தார்கள்.

 

இந்த நிலையில், தர்ஷன் - ஷனம் ஷெட்டியின் காதல் மீண்டும் முறிந்துள்ளது. இதை ஷனம் ஷெட்டியே தனது பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் ஷனம் ஷெட்டி, கடினமான நேரங்களில் அன்பு வைத்திருப்பவர்கள் தான் உண்மையானவர்கள், இதை புரிந்துக்கொள்வதற்கான நேரம் விரைவில் வரும், என்று தெரிவித்துள்ளார்.

 

ஷனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், தர்ஷன் உங்களைவிட்டு சென்றுவிட்டாரா, என்று ஷனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்ப, அவர் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

 

Shanam Shetty

 

ஆக, தர்ஷன், ஷனம் ஷெட்டி காதல் முறிந்துவிட்டது உறுதியாகியிருப்பதோடு, தர்ஷன் ஷெரீனுடன் காதலில் விழுந்துவிட்டார் என்பது தெரிகிறது.