காதல் பிரேக்கப்! - ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மூன்றாது காதலும் தோல்வியில் முடிந்ததாக கடந்த இரு தினகங்களாக தகவல் பரவி வருகிறது. புத்தாண்டு தினத்தன்று விக்னேஷ் சிவன், மது அருந்திவிட்டு வந்ததால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே காதல் முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நயன்தாரா, தனியாக வந்ததோடு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதனால், அவர் காதல் பிரக்கேப்பானதை ரசிகர்கள் உறுதி செய்துவிட்டார்கள்.
இந்த நிலையில், தனது காதல் பிரேக்கப் வெறும் வதந்தி தான், அதில் உண்மை இல்லை, என்பதை நிரூபிக்கும் விதமாக விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா வெளியிட்டுள்ளார். விருது நிகழ்ச்சிக்கு வந்திருப்போது அணிந்திருந்த உடையை அணிந்துக் கொண்டு விக்நேஷ் சிவனை அணைத்தபடி நயன்தாரா இருக்கிறார்.
மேலும், ‘மிஸ் விக்கீஸ்’ என்ற சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு நயன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், தனது மூன்றாவது காதல் இன்னும் வெற்றிகரமாக பயணிப்பதாகவும், காதல் பிரேக்கப் செய்தி வெறும் வதந்தி என்பதோடு, அந்த வதந்திக்கு ஆதாரத்துடன் நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதோ அந்த புகைப்படம்,