Jan 08, 2020 10:25 AM

திருமுருகனால் உடைந்த காதல்! - கண்ணீர் விடும் ‘கல்யாண வீடு’ நடிகை!

திருமுருகனால் உடைந்த காதல்! - கண்ணீர் விடும் ‘கல்யாண வீடு’ நடிகை!

சீரியல் ஏரியாவில் பிரபலமானவர்களில் ஒருவர் திருமுருகன். இவரை திருமுருகன் என்பதைவிட கோபி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திரைப்பட கல்லூரி மாணவரான திருமுருகன் 1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கோகுலம் காலணி’ என்ற தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமானாலும், 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் மூலம் தான் பிரபலமானார்.

 

சீரியல் இயக்குவதோடு, அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் செய்யும் திருமுருகன், ‘எம் மகன்’ மற்றும் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ ஆகிய திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

 

Director Thirumurugan

 

தற்போது, ’கல்யாண வீடு’ என்ற சீரியலை இயக்கி, தயாரிப்பதோடு அதில் கோபி என்ற கதாப்பாத்திரத்திலும் திருமுருகன் நடித்து வருகிறார்.

 

எப்போதும், போல பெண்கள் சூழ்ந்திருக்க, பாசமான அண்ணன், பொறுப்பான மகன், பெண்கள் துரத்தி துரத்தி காதலிக்கும் காதலன், என்று அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்திய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வரும் திருமுருகனால், ‘கல்யாண வீடு’ சீரியலில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் தனது காதலரை பிரிந்துவிட்டாராம்.

 

கல்யாண் வீடு சீரியலில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஸ்பூர்த்தி கெளடாவின் தங்கையாக ரோஜா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ரீபிரியா. ஆரம்பத்தில் பயங்கர வில்லியாக காட்டப்பட்ட இவரது கதாப்பாத்திரம் தற்போது டம்மியாக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, திருமுருகனால், ஸ்ரீபிரியா அவரது காதலரை பிரிந்துவிட்டது, சீரியல் உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

Sripriya

 

காதல், டூயட், ஆக்‌ஷன் என திரைப்படங்களுக்கு நிகராக தொலைக்காட்சி தொடர்களிலும் காட்சிகளை வைப்பது இயல்பாகிவிட்ட நிலையில், இயக்குநர் திருமுருகன் கூட்டு கற்பழிப்பு காட்சியை வைத்து மக்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டார். 

 

அதாவது, டெரரான வில்லியாக நடித்து வந்த ஸ்ரீப்ரியாவை, ஒரு கும்பல் கற்பழிப்பது போன்ற காட்சி ‘கல்யாண வீடு’ சீரியலில் இடம்பெற்றது. சீரியல் வரலாற்றிலேயே கற்பழிப்பு அதுவும் கூட்டு கற்பழிப்பு காட்சியை வைத்து இயக்குநர் திருமுருகன் அதிரடியை காட்டினார். அந்த காட்சியில் ஸ்ரீபிரியாவும் தைரியமாக நடித்தார். ஆனால், அதே கற்பழிப்பு காட்சி தான் அவரது காதலுக்கு வில்லனாக அமைந்துவிட்டது. அந்த கற்பழிப்பு காட்சியில் நடித்ததால், அவரது காதலர் அவருடன் சண்டைப் போட்டதோடு, காதலையும் கட் செய்துவிட்டாராம்.

 

Sripriya in Kalyana Veedu

 

ஸ்ரீபிரியா, அந்த கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன், என்று திருமுருகனிடம் கூறினாலும், திருமுருகன் தான் கட்டாயம் இந்த காட்சியை படமாக்கியே தீருவேன், நீ நிச்சயம் நடிக்க வேண்டும், என்று கூறியதாடு, இந்த காட்சியில் நடித்தால் தான் ரோஜா கதாப்பாத்திரத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன், என்றும் கூறினாராம்.

 

ஆனால், தற்போது கல்யாண வீடு சீரியலில் ரோஜா கதாப்பாத்திரத்தை திருமுருகன் டம்மியாக்கிவிட்டாராம். இது குறித்து ஸ்ரீபிரியா அவரிடம் கேட்டதற்கு, கதைக்கு தேவையானதை தான் செய்ய முடியும், என்று கூறிவிட்டாராம்.

 

Kalyana Veedu Serial

 

இயக்குநரின் வார்த்தையை நம்பி மோசம் போன ஸ்ரீபிரியா, மறுபக்கம் அந்த கற்பழிப்பு காட்சியால் காதலனும் கைவிட்டுவிட்டதால் பெரும் சோகத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

 

Sripriya Kalyana Veedu