நடிகருடன் காதல்! - மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம்

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. தற்போது ‘அரண்மனை கிளி’ என்ற சீரியலில் நடித்து வரும் நந்தினி, சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயாவை பிரிந்து நந்தினி வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று கார்த்திகேயா தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், கார்த்திகேயாவின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்குப் பிறகு அமைதியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நந்தினி, தற்போது சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார்.
‘நாயகி’ சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்து வரும் யோகேஷுக்கும், நந்தினிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.