Jan 16, 2020 05:38 AM

நடிகை பிரியா பவானி சங்கருடன் காதல்! - நடிகரின் பரபரப்பு ஸ்டேட்மெண்ட்

நடிகை பிரியா பவானி சங்கருடன் காதல்! - நடிகரின் பரபரப்பு ஸ்டேட்மெண்ட்

‘மேயாதா மான்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், அப்படம் வெற்றி பெற்ற பிறகும், “தான் ஒரு ஹீரோயின் மெட்டிரியல் அல்ல” என்று பேட்டி ஒன்றில் கூறினார். ஆனால், அவர் சொன்னது தற்போது பொய்யாக்கிவிட்டது கோலிவுட். ஆம், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், ‘இந்தியன் 2’, விக்ரமின் ‘கோப்ரா’ என முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

பிரியா பவானி சங்கர் பற்றி அவ்வபோது சில சர்ச்சை தகவல்களும் பரவி வருகிறது. ஏற்கனவே தனது கல்லூரி தோழரை காதலிக்கும் பிரியா பவானி சங்கர், அவரை கல்யாணம் செய்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகப்போவதாக கூறப்பட்டது. பிறகு, பிக் பாஸ் கவனின் முன்னாள் காதலி தான் பிரியா பவானி சங்கர், என்றும் செய்தி பரவியது. ஆனால், இவை எதற்கும் பிரியா பவானி சங்கர் எந்த விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை.

 

Priya Bhavani Shankar and Lover

 

இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரை காதலிப்பதாகவும், அவரிடம் அவர் காதலை சொல்ல, அதை பிரியா சங்கர் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

SJ Surya

 

ஆனால், இதை மற்றுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, ”இது வதந்தி, யாரோ முட்டாள் செய்த வேலை தான் இது, பிரியா என் தோழி மட்டுமே” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது ‘பொம்மை’ என்ற படத்தின் மூலம் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து இருவரும் ஜோடி சேர்ந்ததால் தான் இப்படி ஒரு வதந்தியை கொளுத்தி போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

 

SJ Surya and Priya Bhavani Shankar in Bommai

 

ராதமோகன் இயக்கும் இப்படத்தை, எஸ்.ஜே.சூர்யா தான் தயாரிக்கிறார் என்பதும், அவர் தான் பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக்கும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.