Sep 30, 2019 04:56 AM

மருத்துவமனையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி! - அதிர்ச்சி தகவல் இதோ

மருத்துவமனையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி! - அதிர்ச்சி தகவல் இதோ

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரன நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்தது தான். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக சமீபகாலமாக தகவல் பரவி வந்தாலும், இவர்கள் ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

 

தங்களைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை கண்டுக்காமல் தங்களது வேலையில் கவனம் செலுத்தி வரும் இந்த காதல் ஜோடி, ‘நானும் ரவுடி தான்’ படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விக்னேஷ் சிவன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் பக்கத்திலேயே இருந்து நயன்தாரா, அவருக்கு தேவையானதை செய்து அவரை பார்த்துக் கொண்டதோடு, அவர் கையை இருகப் பிடித்துக் கொண்டு தினமும் கண்கலங்கியவாறே இருந்தாராம்.

 

ஏகப்பட்ட படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியான நடிகையாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை கவனித்துக் கொண்ட விதத்தைப் பார்த்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்களே அசந்துவிட்டார்களாம்.