Jul 09, 2018 11:11 AM

சொகுசு கார் வாங்கிய ஜூலி! - கலாய்க்கும் நெட்டிசன்கள்

சொகுசு கார் வாங்கிய ஜூலி! - கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலி வேற லெவலுக்கு போய்விட்டார். சினிமா ஹீரோயின், தொலைக்காட்சி தொகுப்பாளினி என்று ரொம்ப நல்லாவே கல்லா கட்டி வரும் ஜூலி, அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் சென்று வருகிறார்.

 

இதற்கிடையே, தனது காதலருடன் அந்தமானில் பிறந்தநாள் கொண்டாடிய ஜூலி, அந்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இந்த நிலையில், இன்னொரு பரபரப்பு ஏற்படும் விதத்தில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, ஜூலி பி.எம்.டபுள்யு கார் ஒன்றை ஓட்டுவது போன்ற புகைப்படம் தான் அது. தனது தோழர் மார்க்குடன் பி.எம்.டபுள்யூ காரில் நெடுந்தூரம் சென்றதாகக் கூறி புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார் ஜூலி.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட இப்படி சொகுசு கார் வாங்க முடியும் என்றால், நாங்களும் ஆட்டைக்கு ரெடி, என்று நெட்டிசன் ஒருவர் கூற, வேறு சிலரோ, காரின் ஸ்பீடோமீட்டர் ஜீரோ கிலோமீட்டர் என்று காட்டியதை பார்த்து, நின்று கொண்டிருந்த காரில் ஏறி போஸ் கொடுத்துவிட்டு பொய் சொல்கிறீர்களா போலி ஜூலி, என்று பதிவிட்டுள்ளார்கள்.

 

எது எப்படியோ சொகுசு கார் மூலம் மீண்டும் மக்களிடம் வைரலாகி வரும் ஜூலி, அந்த புகைப்படம் மூலம் வாங்கி கட்டிக்கவும் செய்கிறார்.