Nov 06, 2019 04:39 AM

விரைவில் துவங்கும் ‘மாநாடு’! - பலிக்குமா தயாரிப்பாளரின் கனவு

விரைவில் துவங்கும் ‘மாநாடு’! - பலிக்குமா தயாரிப்பாளரின் கனவு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும், என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பல முறை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தவர், திடீரென்று ஒரு நாள் படத்தில் சிம்பு இல்லை. இருந்தாலும் ‘மாநாடு’ படம் நிச்சயம் உருவாகும், என்று பதிவிட்டார்.

 

அவரது இந்த பதிவை பார்த்து சிம்பு ரசிகர்கள் கொதித்தெழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அவர்களும் எழுந்தார்கள், சிம்புவுக்கு எதிராக. “நாங்க உங்ககிட்ட என்ன கேட்டோம், ஒரு நல்ல படத்தை தானே கேட்டோம். மாநாடு மூலம் வந்த அந்த வாய்ப்பை இப்படி இழந்துட்டீங்களே” என்று ரொம்ப வருத்தமாக பேசி சிம்பு ரசிகர்கள் வீடியோ வெளியிட்டார்கள்.

 

இதற்கிடையே வெளிநாடு பறந்த சிம்பு மீது ஏகப்பட்ட புகார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பல தயாரிப்பாளர்கள் அவரால் நஷ்ட்டம் அடைந்ததாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட, அதில் மாநாடு தயாரிப்பாளரும் ஒருவர் என்று தகவல் கசிந்தது போல, மாநாடு படத்தில் வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

 

திடீரென்று சிம்புவும் வெளிநாட்டில் இருந்து திரும்ப இருப்பதாகவும், வந்ததும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் ரசிகர்களை சந்திக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் பஞ்சாயத்தை தான் எதிர்கொண்டார். இந்த பஞ்சாயத்தில் மாநாடு விவகாரமும் பேசப்பட்டதாகவும், இறுதியாக சிம்பு படத்தில் நடிப்பார், ஆனால், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தான் படப்பிடிப்பு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, என்று அவரது அம்மா கராராக கூறிவிட்டாராம்.

 

இப்படி ஒரு தகவல் வெளியாகி செய்தியானாலும், அதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்த நிலையில், தற்போது அவரே மாநாடு படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், ஹீரோவாக சிம்புவே நடிக்க இருப்பதாகவும், சிம்புவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டுள்ளார்.

 

Maanaadu

 

இந்த முறையாவது “விரைவில் படப்பிடிப்பு துவங்கும்” நடக்குமா சார்?