Oct 20, 2019 03:41 AM

முடிவுக்கு வந்த ‘மாநாடு’ பிரச்சினை! - சிம்புவின் அம்மாவின் அதிரடி முடிவு

முடிவுக்கு வந்த ‘மாநாடு’ பிரச்சினை! - சிம்புவின் அம்மாவின் அதிரடி முடிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’ பல மாதங்களாக படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், திடீரென்று அப்படத்தில் இருந்து சிம்புவை நீக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

 

மேலும், சிம்புவுக்காக காத்திருந்து பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்ததாகவும், இனி இதற்குமேல் இழக்க விரும்பவில்லை, என்றும் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். ஆனால், இதை மறுத்த சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், சிம்பு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயராகவே இருந்தார். சுரேஷ் காமாட்சிக்கு தான் பைனான்ஸ் பிரச்சினை, அதனால் தான் படப்பிடிப்பு ஆரம்பிப்பதில் காலதாமதம் ஆனது, எனவே தான் சிம்பு வெளிநாட்டுக்கு போய்விட்டார், என்று கூறியதோடு, சிம்பு நடிப்பில் ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தையும் அறிவித்தார்கள்.

 

இதற்கிடையே, தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், ‘மாநாடு’ பிரச்சினை தொடர்பாக நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது. மாநாடு சிம்புக்கு ரூ.2 கோடியை அட்வான்ஸாக கொடுத்ததாக தெரிவித்த சுரேஷ் காமாட்சி, அவருக்காக காத்திருந்ததாலும் பல கோடி இழப்பை சந்தித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷா ராஜேந்திர் பஞ்சாயத்தில் பேசியதோடு, இறுதியாக ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பார் என்றும், ஆனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தான் படப்பிடிப்பில் இருப்பார், என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு சுரேஷ் காமாட்சியும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக, ‘மாநாடு’ மீண்டும் சிம்பு கைக்கு சென்றிருக்கிறது.