Aug 09, 2019 04:41 AM

‘மாநாடு’ படம் நின்றதற்கு தயாரிப்பாளரே காரணம்! - சிம்பு தரப்பு விளக்கம்

‘மாநாடு’ படம் நின்றதற்கு தயாரிப்பாளரே காரணம்! - சிம்பு தரப்பு விளக்கம்

சிம்பு நடிக்க வேண்டிய ஹிட் படங்களில் வேறு ஹீரோக்களில் நடித்து வளர்ந்து விடுகிறார்கள். ஆனால், இனி அப்படி எதுவும் நடக்காது, என்ற நம்பிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சிம்பு, தற்போது அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக, ‘மாநாடு’ படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம், அவர் காலதாமதப்படுத்தியது தான், என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

சிம்புவின் இந்த நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள். சிலர் சமூக வலைதளங்களில், ”இனி எங்களுக்கு நீங்க வேண்டாம், உங்களால் நாங்கள் அசிங்கப்பட்டது போதும்” என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘மாநாடு’ படம் நின்றதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் காரணம், என்று சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், முன்னணி வார இதழியின் இணையதளம் ஒன்றுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

 

அவர் அளித்த விளக்கத்தில், ”சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக கொடுத்த தேதியில் சுரேஷ் காமாட்சியால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. காரணம் அவருக்கு பைனான்ஸ் பிரச்சினை. இதனால் சிம்பு காத்திருந்தார். ஒரு கட்டத்தில் மாநாடு படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற கோபத்தில் தான், அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

 

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே, சனி,ஞாயிற்றுகிழமைகளில் படப்பிடிப்புக்கு வர மாட்டேன், என்று தெரிவித்துவிடும் சிம்பு, சுரேஷ் காமாட்சிக்காக சனி, ஞாயிற்றுகிழமையிலும் படப்பிடிப்புக்கு வர சம்மதித்தார். இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்குவதில் சுரேஷ் காமாட்சி தரப்பு தொடர்ந்து காலதாமதம் செய்ததால் தான், சிம்பு வெறுத்த் போய்விட்டார்.

 

சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல, ‘மிக மிக அவசரம்’ என்ற ஒரு படத்தை தயாரித்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பவரை, தூக்கிவிட வேண்டும் என்பதற்காக தான் சிம்பு அவருக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.