Jun 06, 2020 03:22 PM

மாதவன், ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‘மாறா’

மாதவன், ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‘மாறா’

’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவன், ஸ்ரதா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘மாறா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ப்ரோமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பாகவே முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.

 

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை தாமரை எழுதியுள்ளார். யுவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரபலமான பல விளம்பர படங்கள் மற்றும் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி பெரும் பாராட்டு பெற்ற ‘கல்கி’ திரைப்படத்தை இயக்கிய திலீப் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் மேலும் பல விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.