Sep 26, 2019 11:24 AM

பிக் பாஸ் மீது மீண்டும் ஒரு பரபரப்பு புகார்! - தொடரும் மதுமிதாவின் அதிரடி

பிக் பாஸ் மீது மீண்டும் ஒரு பரபரப்பு புகார்! - தொடரும் மதுமிதாவின் அதிரடி

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற காமெடி நடிகை மதுமிதா, தொடர்ந்து சக போட்டியாளர்கள் மூலம் டார்கெட் செய்யப்பட்டாலும், ரசிகர்களின் ஆதரவோடு பல நாட்களை கடந்த நிலையில், அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

இதற்கிடையே, சக போட்டியாளர்கள் கொடுத்த டார்ச்சரால் மன அழுத்தம் ஏற்பட்டு கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியில் இருந்து வெளியேறியவர் மீது பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போலீசில் புகார் அளிக்க, அதற்கு அவர் தனது சம்பளம் தரவில்லை என்று புகார் அளித்தார். இதையடுத்து அவரது சம்பள பாக்கிய விஜய் டிவி செட்டில் செய்திருக்கிறது.

 

இந்த நிலையில், சமீபகாலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்து வரும் மதுமிதா, தனது தாலியை கழட்ட சொன்னதே பிக் பாஸ் குழுவினர் தான், என்று மீண்டும் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய மதுமிதா, “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நான் தயாராகும் போது, என்னுடைய அனைத்து பொருட்களையும் நிகழ்ச்சி தரப்பில் இருந்து செக் செய்தனர். அப்போது தாலி மிகவும் பெரிய நகை என்பதால் அதனை கழட்டி விடுமாறு கூறியதே அவர்கள் தான்.

 

மேலும் மைக்கில் தாலி உரசும் என்பதும் ஒரு காரணம். முடியாது என நான் மறுத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் வைக்கும் போது, யாரவது தாலியை இழுத்துவிட்டால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என கூறியபின், கணவரின் அனுமதியோடு தாலியை கழட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.