Jul 02, 2019 08:36 AM

தாலியை கழட்டிய மதுமிதா! - பிக் பாஸ் சண்டையால் உருவான சர்ச்சை

தாலியை கழட்டிய மதுமிதா! - பிக் பாஸ் சண்டையால் உருவான சர்ச்சை

பிக் பாஸ் மூன்றாவது சீசனின் வெளியேற்றுதல் பகுதி தொடங்கியிருக்கும் நிலையில், எந்த போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜாங்கிரி மதுமிதாவின் தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சார பேச்சால் பிக் பாஸ் வீட்டில் பெரும் சண்டை உருவாகியுள்ளது.

 

மதுமிதாவின் பேச்சால் அவர் மீது சக பெண் போட்டியாளர்கள் பெரும் கோபமடைந்திருப்பதோடு, அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். இதனால் தனியாக புலம்பிக் கொண்டிருக்கும் மதுமிதாவின், மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இது நீடித்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மதுமிதா தனது தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

மதுமிதாவின் தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்த பேச்சுக்கு நடிகை ஷெரின் மிகவும் கோபப்பட்ட நிலையில், தற்போது வனிதாவும் மதுமிதா மீது பெரும் கோபமடைந்திருப்பதோடு, ”தாலியை கழட்டிவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்து கலாச்சாரம் பற்றி பேசுகிறாயா?” என அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுமிதாவும் பேச, இருவருக்கும் இடையிலான சண்டை முற்றுகிறது.

 

இன்றைய புரோமோவில் இடம்பெற்றிருக்கும் இந்த சண்டைக் காட்சியால், இன்றைய தின பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதோ அந்த சண்டை புரோமோ,