Dec 27, 2019 03:48 PM

ரஜினிக்காக ஐதராபாத்தில் உருவாக்கப்பட்ட மதுரை ஏரியா!

ரஜினிக்காக ஐதராபாத்தில் உருவாக்கப்பட்ட மதுரை ஏரியா!

ரஜினியின் ‘தர்பார் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

 

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். காமெடி வேடத்தில் சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

கடந்த சில தினங்களாக ஐதராபாத்தி உள்ள ஸ்டுடியிவில் பிரம்மாண்டமான பாடல் காட்சியை படமாக்கிய ‘தலைவர் 168’ படக்குழு நாளை, படத்தின் முக்கியமான காட்சியை படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக படத்தில் நடிக்கும் ஒட்டு மொத்த நடிகர்களும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

 

மேலும், கதை மதுரையில் நடப்பது போல இருப்பதால், ஐதராபாத் ஸ்டுடியோவில் மதுரை ஏரியாவை அப்படியே செட் போட்டதோடு, மதுரையில் உள்ள துணை நடிகர், நடிகைகள் ஐதராபாத்துக்கு பேக் செய்து வருகிறார்களாம்.

 

கிட்டதட்ட, பார்ப்பவர்களுக்கு ராமோஜி ஸ்டியோவா அல்லது மதுரையா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு மதுரை ஏரியாவை தத்ரூபமாக செட் அமைத்திருக்கிறார்களாம்.