Feb 20, 2021 09:49 AM

’ராயர் பரம்பரை’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மலையாள நாயகி!

’ராயர் பரம்பரை’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மலையாள நாயகி!

மலையாள சினிமாவின் மாபெரும் வெற்றிப் படங்களான ‘மரடோனா’ மற்றும் ‘டூ ஸ்டேட்ஸ்’ படங்களில் கதாநாயகியாக நடித்த சரண்யா நாயர், ‘ராயர் பரம்பரை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். ‘கழுகு’ கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற மேலும் இரண்டு புதுமுக நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

 

மேலும், கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார் சீனிவாசன், தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்கின்றது.

 

Rayar Parambarai

 

செண்டிமெண்ட் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு தயாரிக்கிறார்.

 

கொரோனா  ஊரடங்கு காலத்திலும் சரியான முறையில் திட்டமிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, பொங்கலுக்கு முன் முடித்துள்ளனர்.

 

ராம்நாத். டி இயக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, குமார் கலையை நிர்மாணித்துள்ளார். சசிகுமார் படத்தொகுப்பு செய்ய சாண்டி மற்றும் ஸ்ரீசங்கர் நடனம் அமைத்துள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.