பிரபல மலையாள நடிகை விபத்தில் சிக்கி மரணம்!

மலையாள சினிமாவில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வந்த மஞ்சுஷா மோகன்தாஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பான ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஞ்சுஷா, திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு பெற்று பிரபல பின்னணி பாடகியாக உருவெடுத்ததோடு, சில மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்டிருந்த இவர், கேரளாவின் பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் தனது தோழியுடம் மோட்டார் பைக்கில் மஞ்சுஷா சென்றார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று இவர்களது பைக்கில் பலமாக மோதியதால் இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வாரம் தொடர்ந்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மஞ்சுஷா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார். அவரது தோழி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பாடகியும் நடிகையுமான மஞ்சுஷாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.