Jul 21, 2019 04:42 AM

மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்' படப்பிடிப்பு தொடங்கியது!

மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்' படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. ’படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.

 

பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விவேக் பாடல்கள் எழுதுகிறார்.

 

விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான், சாந்தனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

Vikram Prabhu

 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் இப்படத்தை 2020 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.