May 14, 2019 05:28 AM

’கடல போட பொண்ணு வேணும்’ படத்திற்காக காத்திருக்கும் மனிஷா ஜித்!

’கடல போட பொண்ணு வேணும்’ படத்திற்காக காத்திருக்கும் மனிஷா ஜித்!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பலர் வளர்ந்ததும் ஹீரோ, ஹீரோயினாக வெற்றி பெறுவதோடு, மக்களிடம் பரிட்சையமானவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு தகுதியடைவர் தான் மனிஷா ஜித். சரத்குமாரின் ‘கம்பீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர், 40 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

 

தற்போது ஹீரோயினாக சில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மனிஷா ஜித், அதில் ஒரு படமான ‘கடல போட பொண்ணு வேண்டும்’ படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

 

இது குறித்து மனிஷா ஜித் கூறுகையில், “சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, "எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த ’நண்பர்கள் கவனத்திற்கு’ படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து ’கமர்கட்’ படத்தில் நடித்தேன், அடுத்த படம் ’ஆண்டாள்’ விரைவில் வெளியாக இருக்கிறது. 

 

Kadala Poda Ponnu Venum

 

எனது தற்போதைய படமான ‘கடல போட பொண்ணு வேணும்’ பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும் போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குநர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்.” என்றார்.