Aug 06, 2019 06:39 PM

மன்சூரலிகானின் ‘கடமான் பாறை’ ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ்

மன்சூரலிகானின் ‘கடமான் பாறை’ ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ்

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும்  படம் ‘கடமான்பாறை.

 

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு  முக்கிய வேடத்தில்  நடிக்கிறார்.  கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

மாடர் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவறான் பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்க்கையில் தடம் மாறுகிறார்கள் என்பது குறித்து பேசும், நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.