Mar 10, 2019 07:49 AM

”என்னை பலர் காதலித்து ஏமாற்றிவிட்டார்கள்” - மனம் திறந்த ராய் லட்சுமி

”என்னை பலர் காதலித்து ஏமாற்றிவிட்டார்கள்” - மனம் திறந்த ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லாமல் இருந்தாலும், முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் அனைத்து செல்வாக்கும், செல்வங்களும் பெற்ற நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. லட்சுமி ராயாக பல ஆண்டுகள் திரையுலகில் வலம் வந்த இவர், சில ஆண்டுகளாக ராய் லட்சுமி என்று வலம் வருகிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்த ராய் லட்சுமி, பாலிவுட்டிலும் கால் பதித்து தனது கவர்ச்சியால் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினாலும், அது அவருக்கு கைகொடுக்கவில்லை.

 

இந்த நிலையில், ஜெய் நடிப்பில் உருவாகும் நீயா 2 படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் ராய் லட்சுமி, சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனது காதல் அனுபவம் குறித்தும், தன்னை காதல் என்ற பெயரில் ஏமாற்றியவர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

 

திருமணம் குறித்து ராய் லட்சுமியிடம் கேட்டதற்கு, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், ஆனால் அது காதல் திருமணமாகத் தான் இருக்கும், என்றவர், நான் காதல் என்ற பெயரில் பலரிடம் ஏமாந்து போயிருக்கிறேன், அதே சமயம் இன்னும் காதலிக்கவும் தயாராக இருக்கிறேன், பலர் என்னை காதலித்து ஏமாற்றியிருந்தாலும், இனியும் என்னை காதலிக்க பலர் தயாராகத்தான் இருக்கிறார்கள். அப்படி என்னை யாராவது காதலித்தால், நானும் காதலிப்பேன். மொத்தத்தில் எனது திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும், என்றார்.

 

மேலும், தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கவே அதிகமான வாய்ப்புகள் வந்ததால் தான், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை, வித்தியாசமான நல்ல வேடங்கள் அமைந்தால் தமிழில் தொடர்ந்து நடிப்பேன், என்றும் கூறினார்.