Jan 06, 2020 03:27 AM
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி படத்தின் தலைப்பு ‘கர்ணன்’!

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் இரண்டாவது படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் தொடங்கியது. இதற்காக, அங்கு 25 ஏக்கரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன் ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் லால் நடிக்கிறார். யோகி பாபு, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.