Mar 10, 2020 07:47 AM

தனுஷுக்கு பிறகு வாரிசு நடிகரை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்!

தனுஷுக்கு பிறகு வாரிசு நடிகரை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது படத்திற்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம், முதல் படத்தில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தாலும், அப்படம் வியாபரம் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்ததால், விக்ரம் அப்செட்டாகிவிட்டார்.

 

இதற்கிடையே, ஏற்கனவே பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற தலைப்பில் உருவான படத்தை தூக்கியிருந்தவர்கள் தற்போது மீண்டும் அப்படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களாம். ஆனால், அதற்கு இயக்குநர் பாலாவின் சம்மதம் வேண்டும் என்பதால், தற்போது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் விக்ரம் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

Dhruv Vikram

 

’வர்மா’ வெளியாவது ஒரு பக்கம் இருந்தாலும், துருவ் விக்ரமின் அடுத்தப் படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும், என்பதில் தீவிரம் காட்டும் விக்ரம், முதலில் இயக்குநர் விஜய் சொன்ன கதையை ஓகே செய்து வைத்திருந்ததாகவும், ஆனால், இயக்குநர் விஜய் ‘தலைவி’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால், மாரி செல்வராஜ் படத்தில் துருவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதில், எது நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.