Jul 30, 2019 03:33 PM

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ பட பாடல்!

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ பட பாடல்!

ரசிகர்களுக்கான படம் எடுக்கும் இயக்குநர்களில் சரண் முக்கியமானவர். அவரது பல படங்கள் தற்போதும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவைகளாக இருக்கின்றன. அந்த வகையில், சிறு இடைவெளிக்குப் பிறகு ரீஎண்ட்ரியாகியிருக்கும் இயக்குநர் சரண், பிக் பாஸ் புகழ் ஆரவை ஹீரோவாக வைத்து ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 

ராதிகா பெண் தாதாவாக நடிக்கும் இப்படத்தில் நாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், ரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் இசையமைப்பில் உருவான “தா..தா...” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெளியான டீசர், பாடல் என்று அனைத்துமே இப்படம் அனைத்து தரப்பினருக்குமான நல்ல பொழுதுபோக்கு படமாக உருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

 

சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.மோகன் கலையை நிர்மாணித்திருக்கிறார். ஹரி தினேஷ், விக்கி மற்றும் பிரதீப் தினேஷ் சண்டைப்பயிற்சியை கவனிக்க, கல்யாண், தினேஷ் ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள்.