May 04, 2019 04:20 PM

திரிஷாவுடன் திருமணம்! - பிரபலத்தின் விருப்பத்தால் திரையுலகம் அதிர்ச்சி

திரிஷாவுடன் திருமணம்! - பிரபலத்தின் விருப்பத்தால் திரையுலகம் அதிர்ச்சி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘பரமபதம் விளையாட்டு’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் வெளியாக தயாராக உள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், சரவணன் இயக்கத்தில் ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

தனது இளமையான அழகால் ரசிகர்களின் கனவு கண்ணியாக இருக்கும் திரிஷா, இன்று தனது 36 அவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சாரிமி, திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, ”நான் உன்னோட முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், நாம் திருமணம் செய்து கொள்வோம். அப்படி ஒரு சட்டம் தான் வந்துவிட்டதே” என்ற ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை சார்மி விளையாட்டாக ட்விட்டரில் இதை பதிவிட்டரிந்தாலும், அவரது உள் மனதில் அப்படி ஒரு ஆசை இருப்பதை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இதேபோல், தான் நடிகர் ஆர்யா திரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் போது “குஞ்சுமணி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.