Mar 09, 2019 08:28 AM

சிம்பு வீட்டில் திருமண ஏற்பாடு! - தேதியும் குறிச்சாச்சு

சிம்பு வீட்டில் திருமண ஏற்பாடு! - தேதியும் குறிச்சாச்சு

‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, இந்த ஆண்டு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ஹன்சிகாவின்  ‘மஹா’ படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிம்பு, மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், காதல் தோல்விக்கு பிறகு திருமணம் குறித்து பேசுவதையே சிம்பு தவிர்த்து வருகிறார்.

 

சிம்புவின் தம்பியான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதற்கு காரணம், அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

Kuralarasan

 

இந்த நிலையில், குறளரசனின் திருமண ஏற்பாடுகளை படு ரகசியமாக செய்து வரும் டி.ராஜேந்திர், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று குரளரசனுக்கும், அவரது காதலிக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறாராம். மிகவும் எளிமையான முறையில் சிம்புவின் வீட்டில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.