நடிகை அஞ்சலியுடன் திருமணம்? - நடிகர் ஜெய்யின் ஸ்டேட்மெண்ட்

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஜெய்யும், அஞ்சலியும் தங்களது காதலை உறுதி செய்வது போல புகைப்படங்களை வெளியிட்டார்கள். மேலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த படத்தின் படப்பிடிப்பின் போது ஒரே அறையில் தங்கியதாகவும் கூறப்பட்டது.
அதேபோல், ஜெய்யும் தனக்கு அஞ்சலியை மிகவும் பிடிக்கும், அஞ்சலிக்கும் என்னை பிடிக்கும், என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், விரைவில் அஞ்சலியும், ஜெய்யும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அஞ்சலியுடனான காதல் மற்றும் திருமணம் தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நடிகர் ஜெய், தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என்றும், அவரை திருமணம் செய்யப் போவதில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் என்பது சந்தோஷமான விஷயம், அது நடக்கும் போது அனைவருக்கும் தெரியப்படுத்துவேன், என்றும் தெரிவித்துள்ளார்.