Aug 30, 2019 03:52 AM

லொஸ்லியாவுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்ததா? - சர்ச்சையை உருவாக்கிய கவின்

லொஸ்லியாவுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்ததா? - சர்ச்சையை உருவாக்கிய கவின்

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா - கவின் காதல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், கவினை மூன்று வருடங்களாக காதலித்த பெண் யார்? என்ற தேடலில் நெட்டிசன்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் தற்போது சிக்கியிருப்பது நடிகை பிரியா பவானி சங்கர். 

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து வரும் பிரியா பவானி சங்கர், பல பெரிய படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தான் கவினை மூன்று வருடங்களாக காதலித்தார், என்பதற்கான ஆதாரங்களை இணையத்தில் இருந்து உருவி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

 

இது ஒரு புறம் இருக்க மறுபுறம், லொஸ்லியாவுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்ததாக பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கவின் ஓபனாக லொஸ்ல்யாவிடம் கேட்டதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை வெடித்திருக்கிறது.

 

நேற்றைய எப்பிசோட்டில், லாஸ்லியா கவினிடம் ”எந்த முடிவும் இப்போ எடுக்காதே. வெளியில் போய் பேசி முடிவெடுக்கலாம்” என கூறினார். அதற்கு கவின் ”என்ன பேசவேண்டும் past பற்றியா, இல்லை Future பற்றியா?” என கேட்டார்.

 

எல்லாமேதான் என லாஸ்லியா கூற, கவின் ”என்ன பாஸ்ட், உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா. குழந்தை பொறந்துடுச்சா.. அப்படியே இருந்தாலும் என்ன..” என நக்கலாக கேட்டார்.

 

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த லொஸ்லியா, “என்ன கதைச்சிகிட்டீருகீங்க நீங்க” என்று கோபமாக கேட்டார். இந்த பிரச்சினை இன்றும் வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்கிறது. மேலும், இதனால் கவின், லொஸ்லியா காதலில் விரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.