5 பேருடன் திருமணம்! - சர்ச்சையில் சிக்கிய நடிகை ரித்திகா சிங்

‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். மும்பையை சேர்ந்த இவர் நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கனை ஆவார்.
‘இறுதிச் சுற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ரித்திகா சிங், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அருண் விஜயுடன் ‘பாக்ஸர்’ மற்றும் ’ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திருமணம் குறித்து பேசிய ரித்திகா சிங், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் ரித்திகா சிங்கிடம் ரசிகர்கள் ஒருவர் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரித்திகா சிங், குறைந்தபட்சம் 5 பேரையாவது தான் திருமணம் செய்துக் கொள்வேன், என்று கூறினார். அவரது இத்தகைய பதிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.