Feb 06, 2020 02:37 AM

’மாஸ்டர்’ படத்தின் புதிய வீடியோ லீக்!

’மாஸ்டர்’ படத்தின் புதிய வீடியோ லீக்!

விஜயின் ‘மாஸ்டர்’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படப்பிடிப்பை வேகமாக முடித்து, பின்னணி வேலைகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

 

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருவதோடு, படத்தில் விஜயின் லுக்கும் வித்தியாசமாக இருக்கிறது. இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு கிடைத்திருக்கிறது. அத்துடன் ‘பிகில்’ படத்தின் பிரம்மாண்ட வசூலால், தற்போது மாஸ்டர் படத்தின் வியாபராமும் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கிறதாம். படப்பிடிப்பு முடிவதற்குள் இப்படி ஒரு பெரிய வியாபாராம் இதுவரை எந்த படத்திற்கும் நடந்ததில்லை என்று கூறுகிறார்கள்.

 

அதே சமயம், மாஸ்டர் படத்தின் இந்த வியாபாரத்தை தொடர்ந்து, விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையின் சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

நேற்று விஜயின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. குறிப்பாக விஜயின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அங்கேயும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும், விஜயிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ,