Jun 29, 2019 05:15 AM

தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்ட பிக் பாஸ் மீரா மிதுனின் அம்மா!

தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்ட பிக் பாஸ் மீரா மிதுனின் அம்மா!

பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் மாடலும், நடிகையுமான மீரா மிதுன், குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களே அவர் மீது சில புகார்கள் கூற, வெளியே ஜோ என்பவரும் சில புகார்களை கூறி வருகிறார்கள்.

 

ஏற்கனவே மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் திருட்டுத்தனமாக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், போலீஸ் அவரை பிக் பாஸ் வீட்டில் வைத்த கைது செய்யலாம், என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், தொடர் சர்ச்சைகள் காரணமாக மீரா மிதுனின் அம்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்செல்ல்வி, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, என்று ஜோ கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த அவரது அம்மா, ”அவரின் உண்மையான பெயர் தமிழ்செல்வி தான். ஜோசியர் ராசிப்படி வைத்த பெயர் மீரா மிதுன். திருமணம் நடந்தது உண்மை தான், விவாகரத்தும் முடிந்துவிட்டது.” என்று தெரிவித்ததோடு, ஜோ ஏற்படுத்திய மன உளைச்சலினால் தான் நேற்று தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.