மீரா மிதுனின் ஆட்டம் தொடங்கியது! - ஷாக்கிங் புகைப்படம் இதோ

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மீரா மிதுன், சென்னையை சேர்ந்த பிரபல மாடலாக வலம் வந்ததோடு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக் போட்டியில் கலந்துக் கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நகர மீரா மிதுனின் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாக இருந்தாலும், அவரது செயல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதை தொடர்ந்தும், இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நாடகம் என்று மக்கள் நினைக்க கூடும் என்பதாலும், அவரை பிக் பாஸ் எலிமினேட் செய்தார்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற மீரா மிதுன், வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் மீரா மிதுன், சினிமாவில் எப்படிப்பட்ட வேடம் வந்தாலும் நடிக்க ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது அவரது கவர்ச்சியான புகைப்படத்துடன் கூடிய பதிவு,