May 07, 2019 06:54 AM

பழம்பெரும் நடிகை ப.கண்ணாம்பாவின் நினைவு தினம்!

பழம்பெரும் நடிகை ப.கண்ணாம்பாவின் நினைவு தினம்!

தமிழ் மற்றும் தெலுங்கு என்று 150 க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ப.கண்ணாம்பா.

 

பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும், ‘மனோஹரா’ திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை கணீரென்ற குரலில் பேசி கைதட்டல் பெற்ற இவரது கம்பீர நடிப்பு தான், மக்கள் மனதில் இவரை இடம்பெற செய்ததோடு, இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கவும் செய்திருக்கிறது.

 

நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராக சினிமாத் துறையில் பயணித்த ப.கண்ணாம்பா, சொந்தமாக 25 படங்களை தயாரித்திருக்கிறார்.