Jan 07, 2020 04:41 AM

’மெர்சல்’ தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியின் சோகமான பதிவு!

’மெர்சல்’ தயாரிப்பாளர் ஹேமா ருக்மணியின் சோகமான பதிவு!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இராம.நாராயணன். 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் இவர், தனது ஸ்ரீ  தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் மக்களின் பல்ஸை அறிந்து படம் எடுப்பதில் வல்லவரான, இவரது மகன் முரளி மற்றும் அவரது மனைவி ஹேமா ருக்மணி முரளி இருவரும் சேர்ந்து தான் ‘மெர்சல்’ படத்தை தயாரித்தார்கள்.

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மெர்சல் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தினாலும், பட்ஜெட் அதிகரித்ததால் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இயக்குநர் அட்லீ, சரியான முறையில் திட்டமிடாமல் படப்பிடிப்பு நடத்தி, பட்ஜெட்டை அதிகரித்ததே, என்று பலர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள்.

 

மேலும், தயாரிப்பாளர் ஹேமா ருக்மணிக்கு சொந்தமாக சில சொத்துக்களும், இதனால் பறிபோனதாகவும் கூறப்பட்டது. அத்துடன் படம் தயாரிப்பதை நிறுத்திய ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டியோஸ் நிறுவனம், தயாரிப்பில் இருந்த சில படங்களையும் கைவிட்டுவிட்டது. அதில் ஒன்று தான் தனுஷ் இயக்க இருந்த படமாகும்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, சமீபத்தில் நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டிருக்கிறார். அதாவது, கடல் உணவுகள் அவருக்கு ஒத்துக்கத்தாம், அதனால் வெளியில் உணவு உண்ணுவதில் மிகவும் பாதுகாப்பாக இருப்பவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாப்பிட்ட உணவால், அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்திருக்கிறார்.

 

தற்போது சிகிச்சை முடிந்து குணமாகியிருப்பவர், தனது வாட்ஸ்-அப் டிபியில் “மறுஜன்பம் பெற்றிருக்கிறேன்” என்ற வாசகத்தோடு வீல் சேரில் அமர்ந்த புகைப்படம் ஒன்றையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.