Jan 18, 2020 05:04 AM

எம்.ஜி.ஆர் கனவை நனவாக்கிய அனிமேஷன் நிறுவனம்!

எம்.ஜி.ஆர் கனவை நனவாக்கிய அனிமேஷன் நிறுவனம்!

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும், என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முக்கியமான கனவாகும். இதற்காக பல ஆண்டுகள் முயற்சித்து போஸ்டர் வரை வந்த அப்படம், சில காரணங்களால் கைவிடப்பட்டது.

 

தற்போது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா வெப் சீரிஸாக எடுக்கிறார். மறுபக்கம் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மணிரத்னம் திரைப்படமாக எடுக்கிறார்.

 

இந்த நிலையில், எ.ஜி.ஆர் நடிப்பிலும் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஆம், அனிமேஷன் திரைப்படமாக ‘வந்தியத்தேவன் - பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற தலைப்பில் அனிமேஷன் திரைப்படமாக சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற இப்படத்தின் பணி தற்போது நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் பாடல் ஒன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளான நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலுக்கு இசையமைத்த ரமேஷ் தமிழ்மணி இப்படாலுக்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். தவச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த அனிமேஷம் திரைப்படத்தை தமிழ் மட்டும் இன்றி இந்திய மொழிகள் பலவற்றில், இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.