அடுத்த வாரம் வெளியாகும் ‘எம்.ஜி.ஆர்’ பட டீசர்!

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை ‘எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில், பிரபல விளம்பர பட நடிகரும், டிவி நடிகருமான சதிஷ்குமார் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வேடத்தில் ரித்விகாவும், எம்.ஆர்.ராதா வேடத்தில் பாலாசிங்கும் நடிக்க, இயக்குநர் பந்துலு வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபானியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனியின் உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்கள் கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் பூவை செங்குட்டவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுயுள்ளனர். ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு ‘எம்.ஜி.ஆர்’ படத்தை முதல்வட் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த நிலையில், அடுத்த வாரம் இப்படத்தின் டீசரை வெளியிடப் போவதாக, இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அ.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.