Sep 30, 2019 06:50 PM

ஜோதிகா படத்திற்காக வெளிநாட்டில் விருந்து வைத்த அமைச்சர்!

ஜோதிகா படத்திற்காக வெளிநாட்டில் விருந்து வைத்த அமைச்சர்!

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது மீண்டு நடிக்க தொடங்கியுள்ளார். அவரது ரீ எண்ட்ரி படமான ‘36 வயதினிலே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து நடித்து வரும் ஜோதிகாவின் படங்கள் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.

 

அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் ‘ராட்சசி’ உள்ளூர் ரசிகர்களை தாண்டி வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அரசு பள்ளிகளின் அவல நிலையை எடுத்துரைக்கும் விதமாக கதை அமைந்திருக்கும் இப்படத்தை பார்த்த மலேசிய கல்வித் துறை அமைச்சர் படம் குறித்தும், நடிகர் ஜோதிகா குறித்தும் வெகுவாக பாராட்டு தெரிவித்தார். அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஜோதிகாவும் அவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 

Malaysia minister wish jyothika movie

 

இந்த நிலையில், ‘ராட்சசி’ படக்குழுவை நேரில் பாராட்ட விரும்பிய மலேசிய கல்வித் துறை அமைச்சர் மாஸ்லே மாலிக், படக்குழுவினரை மலேசியா அழைத்திருந்தார். அதன்படி, அதன்படி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றார்கள்.

 

கல்வித்துறை துணை அமைச்சர் ஒய்.பி.டியோ னி சிங், டி.ஜி.வி. தலைமை நிர்வாக அதிகாரி யோ ஓன் லாய் மற்றும் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் ஆகியோர் ‘ராட்சசி’ படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள டி.ஜி.வி. சேத்தியாவாக் என்ற மாலில் உள்ள ஆர்.ஜி.வி. திரையரங்கில் படம் பார்த்ததுடன், கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில், தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர், எஸ்.ஒய்.கௌதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கரன் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி ஆகியோர் பங்குகொண்டுள்ளுனர்.

 

Malaysia minister wish jyothika movie