Jun 08, 2019 04:29 AM

நடிகர் சங்க தேர்தலை கைப்பற்றிய அமைச்சர்! - கைதாகப்போகும் விஷால்

நடிகர் சங்க தேர்தலை கைப்பற்றிய அமைச்சர்! - கைதாகப்போகும் விஷால்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில், ராதாரவி, சரத்குமார் தலைமையிலான அணியை வீழ்த்தி நாசர், விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதோடு, நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணியில் மும்முரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, நடிகர் சங்கம் கட்டிடம் இன்னும் முடியாததால் இந்த தேர்தலிலும் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோரது தலைமையில் சிறு மாற்றங்களுடன் மீண்டும் பாண்டவர் அணி போட்டியிருகிறது. 

 

இந்த நிலையில், கடந்த தேர்தலில் நாசர் அணியினருக்கு ஆதரவாகவும், அவர்களது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகவும் இருந்த வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐசர் கே.கணேஷ், தற்போது விஷாலுக்கு எதிராக திரும்பியுள்ளதோடு, பாக்யராஜ் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கி தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐஸர் கே.கணேஷ் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். மேலும், விஷால் அணியில் உள்ள பலர் ஐசரி கணேஷின் அணிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், விஷாலையும், கார்த்தியையும் நேற்று சந்தித்த ஐசரி கே.கணேஷ், ” எதிர்க்கட்சி தலைவரை ஏன் சந்தித்தாய், அதனால் அதிமுக அரசு உன் மேல் கோபமாக இருக்கிறது. எனவே, நீ நடிகர் சங்க தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள், இல்லையென்றால் கைதாவாய்” என்று அன்பாக மிரட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Isari K Ganesh vishal and karthi

 

அதற்கு விஷாலோ, “மு.க.ஸ்டாலின் குடும்பத்தாருடன் சிறு வயதில் இருந்தே நான் பழகி வருகிறேன். உதயநிதி எனது கல்லூரி நண்பன், அந்த முறையில் தான் அவரை சந்தித்தேன், இதை ஏன் அரசியல் செய்கிறீர்கள்” என்று கேட்க, ”அதெல்லாம் செல்லாது...செல்லாது...” என்று கூறிய கணேஷ், முதல்வர் எடப்பாடியும், கார்த்தியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், முதல்வரை கார்த்தி மரியாதை நிமித்தமாக ஒரு முறை கூட சந்திக்காததால் அவர் மீதும் அரசு கோபமாக இருப்பதாக கூறினாராம்.

 

ஐசரி கே.கணேஷின் இந்த அன்பு மிரட்டலால் ஷாக்கான விஷாலும், கார்த்தியும் அந்த மீட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பி விட்டார்களாம்.

 

ஏற்கனவே, விஷால் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியிருக்கும் அரசு, தற்போது நடிகர் சங்கத்தின் மீது கண் வைத்திருப்பதாக சிலர் கூறுவதோடு, அமைச்சர் ஒருவர், நடிகர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ஐசரி கே.கணேஷ் அணியில் இணைந்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுமாறும் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Bagyaraj team in Nadigar Sangam Election

 

இதனால் தான், விஷால் அணியில் இருந்த சங்கீதா, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் ஐசரி கே.கணேஷ் அணியில் இணைந்திருக்கிறார்கள்.