காணாமல் போன ‘காக்க காக்க’ ஜீவன்! - என்ன ஆனார் தெரியுமா?

‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான ஜீவன், அதன் பிறகு ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அதையடுத்து அவருக்கு தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அவைகளை தவிர்த்தவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்பதில் உறுதியாக இருந்தார்.
அதேபோல், அவர் ஹீரோவாக நடித்த ‘திருட்டுப்பயலே’, ‘நான் அவனில்லை’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் ஜீவனுக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வந்துக் கொண்டிருந்தாலும், ’மச்சக்காரன்’, ‘தோட்டா’, ‘நான் அவனில்லை 2’ ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால் சற்று தடுமாற தொடங்கினார். மேலும், அவரது நடிப்பில் உருவான ‘கிருஷ்ணலீலை’, ‘ஜெயிக்கிற குதிர’ போன்ற படங்கள் பிரச்சினையில் சிக்கி ரிலீஸாகமல் போனது.
இதன் காரணமாக ஜீவனுக்கு பட வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டதால், அவரும் ஆளே காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில், ஜீவன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ‘அசரீரி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஜீவன் ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குநர் ஜிகே இயக்கும் இப்படத்திற்கு மருதநாயகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மீண்டும் ஜீவனுக்கு வில்லன் வேடத்தில் நடிக்கவே வாய்ப்புகள் வந்ததால் அவர் அதனை நிரகாரித்ததோடு, கதை தேர்விலும் கவனம் செலுத்தியதால் தான் இந்த நான்கு ஆண்டுகள் இடைவெளியாம்.