இயக்குநர் அட்லீ செய்த குளறுபடி! - அப்செட்டில் விஜய்

விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாக உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விஜயின் பிறந்தநாளன ஜூன் 22 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் அட்லீயின் குளறுபடியாமல் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாகும் என்று கூறப்படுகிறது.
கதை திருட்டு, விபத்து, இயக்குநர் மீது துணை நடிகை புகார் என்று ‘தளபதி 63’ பல்வேறு இரச்சினைகளை சந்தித்தாலும், படப்பிடிப்பு எந்தவித தடையும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை அருகே உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் படப்பிடிப்பு நடப்பதால், படக்குழுவினர் வேகமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இதனால், பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இயக்குநர் அட்லீ செய்த குளறுபடியால படப்பிடிப்பு இப்போதை முடியாது என்று கூறப்படுவதோடு, ஏற்கனவே விஜயிடம் 100 நாட்கள் கால்ஷீட் பெற்ற அட்லீ, தற்போது கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். கொடுத்த தேதிகளை விட கூடுதலாக ஒரு சில நாட்கள் கால்ஷீட் கேட்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இப்படி 40 நாட்கள் அட்லீ கேட்பதால் விஜய் அப்செட்டாகியுள்ளாராம்.
ஏற்கனவே, ‘மெர்சல்’ படத்தில் தேவையில்லாமல் செலவு செய்து படத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கியதாக இயக்குநர் அட்லீ மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தற்போது தளபதி 63 யில் கூடுதலாக கால்ஷீட் கேட்டிருப்பவர், படப்பிடிப்பை குறித்த தேதியில் முடிக்காமல் காலதாமதம் ஆக்குவதோடு, படத்தின் பட்ஜெட்டையும் அதிகமாக்கி விடுவாரோ, என்று தயாரிப்பு தரப்பு அச்சம் அடைந்துள்ளனர்.