Oct 17, 2019 06:31 AM

‘அசுரன்’ படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

‘அசுரன்’ படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

கடந்த அக்டோபர் 4 ஆம் வெளியான ‘அசுரன்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டு வரும் இப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ‘அசுரன்’ படம் பார்த்திருக்கிறார்.

 

படத்தைப் பார்த்தவர், படத்தை வெகுவாக பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”

அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல பாடம்!

 

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!

 

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

MK Stalin watch Asuran movie