Mar 09, 2020 03:46 PM

மக்கள் நிதியில் உருவாகும் ‘மூப்பத்தி’! - ’திரெளபதி’ க்கு போட்டியா?

மக்கள் நிதியில் உருவாகும் ‘மூப்பத்தி’! - ’திரெளபதி’ க்கு போட்டியா?

கிரவுட் ஃபண்டிங் என்று சொல்லக்கூடிய பொதுமக்களின் நிதி பெற்று உருவான படம் ‘திரெளபதி’. படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும், அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாடக காதலுக்கு ஊடகங்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

பதிவு திருமணத்தின் மோசடிகள் குறித்து பேசியிருக்கும் திரெளபதி குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் செய்யும் காதல் திருமணங்களை நாடக காதல், என்று சுட்டிக்காட்டியிருப்பதால் அப்படத்தை பல்வேறு ஊடகங்கள் விமர்சித்து வருவதோடு, அப்படத்தின் இயக்குநர் மோகனையும், ஊடகங்கள் காட்டமாக விமர்சிக்கிறது. இருந்தாலும், தனது அடுத்தப் படமும் இதுபோன்று தான் இருக்கும், என்று கூறியிருக்கும் இயக்குநர் மோகன், “இனி வன்னிய படைப்பாளிகளின் வருகை அதிகரிக்கும்” என்று சமூக வலைதளங்களில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், இயக்குநர் மிஸ்கினிடம் பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஈஸ்வரி, என்பவர் இருளர் வாழ்க்கையை மையப்படுத்தி ‘மூப்பத்தி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

இந்த படமும், மக்கள் நிதி மூலம் உருவாக உள்ளதால், இப்படத்தை ‘திரெளபதி’ படத்திற்கு போட்டியான படம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது வெறும் வதந்தியே, இப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களான இருளர் சமுதாயத்தைப் பற்றியதாகும்.

 

இப்படம் குறித்த இயக்குநர் ஈஸ்வரியின் விளக்கம் இதோ,