Sep 12, 2019 06:10 AM

பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அம்மா! - மீண்டும் சர்ச்சையில் கவின் காதல்

பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அம்மா! - மீண்டும் சர்ச்சையில் கவின் காதல்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார்கள். முகேனின் அம்மா மற்றும் தங்கை வந்ததை தொடர்ந்து லொஸ்லியாவின் தங்கை மற்றும் அப்பா வந்ததால், கவினின் காதல் காலியானதை அனைவரும் அறிவார்கள்.

 

இந்த நிலையில், இன்று மற்றொரு போட்டியாளரின் குடும்ப நபர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் இதுவரை எந்தவித சர்ச்சையும் ஏற்படவில்லை என்றாலும், அடுத்தடுத்து வர இருக்கும் குடும்ப நபர்களால் எந்த மாதிரியான சர்ச்சைகள் ஏற்பட போகிறது என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

இன்றைய எப்பிசோட்டில் தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார்கள். தர்ஷனின் அம்மாவின் பிறந்தநாளும் பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்படுகிறது.

 

Big Boss 3

 

இதே போன்று கவினின் அம்மாவும் பிக் பாஸ் வீட்டில் விரைவில் வர இருக்கிறார். அவர் எப்படி லொஸ்லியாவின் தந்தை அவரது காதல் விவகாரம் குறித்து கண்டித்தாரோ அதுபோல் கவினை கண்டிப்பாரா அல்லது லொஸ்லியாவை அனைப்பாரா என்பதிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.